சவுதி அரேபியாவில் பேருந்து ஒன்று டீசல் லொரியுடன் மோதி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 42 இந்தியர்கள் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீதே டீசல் லொரி மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் பக்தர்கள் மக்காவில் தங்கள் புனித கடமைகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
சவுதியில் விபத்து – 42 இந்திய பக்தர்கள் உயிாிழப்பு – Global Tamil News
3