2
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 05 மணிக்கும் , குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது. அதேநேரம் வழமையான ஏனைய சேவை நேரங்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.