மகிந்த நாயும் ஹெலியில் பறந்தது!

by ilankai

மஹிந்த  நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார்   என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.ஜனாதிபதியின் செலவீனங்களை அநுரகுமார திஸாநாயக்க குறைத்துள்ளார்.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 9  மாதங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 124 மில்லியன் ரூபாய் செலவழித்துள்ளார். அதே மாதிரி 2025 ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை தோழர் அநுரகுமார திஸாநாயக்க 79.9 மில்லியன் ரூபாய் செலவழித்து உள்ளார். இங்கு 44.1 மில்லியன் ரூபாய் மீதம் படுத்தப்பட்டு மக்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு வரும் போது இரண்டு உலங்கு வானூர்திகளில் வருவார்.. அவர் வடக்கில் பயணம் செய்ய குண்டு துளைக்காத கார் கொழும்பில் இருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. மக்கள் பணம் வீண்விரயம் செய்யப்பட்டது. ஆனால் எமது ஜனாதிபதி இலங்கையின் எந்தப்பாகம் சென்றாலும் இரண்டு வாகனங்களுடன் சென்று மக்கள் பணம் வீண் விரயம் செய்வதை குறைத்துள்ளார். வெளிநாட்டு பயணங்களின் போதும் முன்னாள் ஜனாதிபதிமார் அதிக செலவீனங்களை செய்துள்ளனர். 2010-2014 வரை மஹிந்த ராஜபக்ஸ  ஜனாதிபதி அவர்கள் 3572 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். 2017 -2019 வரை மைத்திரிபால சிறிசேன அவர்கள் 384 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார். 2020-2022 வரை கோட்டபாய ராஜபக்ச அவர்கள் 126 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். ஆனால் 2024-2025 பெப்ரவரி வரை எங்களுடைய ஜனாதிபதி வெறுமனே 1.8 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளார். இதை ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக தெரிகிறது. இதற்கு மேலாக மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 2013 ஆம் ஆண்டு 1144 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்துள்ளார். இது யாருடைய பணம். இது தான் இந்த நிலைக்கு காரணம். எங்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயலுங்கள். மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது முழுக் குடும்பத்திற்கும் அரச நிதியை செலவு செய்தார். நாயை கொண்டு செல்ல விமானத்தை பயன்படுத்தி உள்ளார். மஹிந்தவின் மகன் யோசித ராஜபக்ச. யப்பான் செல்ல வெளிவிவகார அமைசரின் மூலம் 20 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. கோட்டபாய ராஜபக்ச காலத்தில் அவரது மகன் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் அதிகாரி ஒருவர் இல்லாத நிலையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று 21 மாதம் அங்கு இருந்தார். அதற்காக வெளிவிவகார அமைச்சின் பணம் செலவிடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஐ.நாவில் உரையாற்றுகின்ற போது அதனை தொகுத்து வழங்க இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு 300 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார். இவ்வாறு தான் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட து. ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. முன்னுதாரணமாக நடந்து காட்டுகின்றனறோம்.

Related Posts