2
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய மகசீனும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு 09ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாவனையற்று பற்றைக்காடாக காணப்படும் காணி ஒன்றில் துப்பாக்கி ஒன்று மகசீனுடன் காணப்படுவதாக காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசீன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் துப்பாக்கியை நீதிமன்றில் பாரப்படுத்தி , நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.