பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) தனது உரையை வெட்டி ஒட்டி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்கு பிபிசி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட போதும், இழப்பீடு வழங்க மறுத்தது.இதனையடுத்து பிபிசி மீது ஒரு பில்லியன் அமெரிகக டொலர் தொடக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பீடு வழங்க வழக்குத் தொடரவுள்ளதாக டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளார்.அத்துடன் வழக்கை அடுத்த வாரம் தொடுக்கவுள்ளதாகவும் டிரம்ப் ஏர் போஸ்ட் வன் விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போதே அவர் கூறினார்.பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் பிபிசி பிரச்சினையை எழுப்பப் போவதாக டிரம்ப் கூறினார். நான் இந்த வார இறுதியல் அவருடன் பேசப்போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.அண்மையில் அவர் எனக்கு தொலைபேசி அழைப்பைச் செய்தார். பிபிசியின் செயலால் அவர் மிகவும் வெட்கப்படுகிறார் என்று டிரம் கூறினார்.
பிபிசியிடம் 5 பில்லியன் டொலர்களை இழப்பீடாகக் கோரவுள்ளேன் – டிரம்ப்
4