மனைவியை மிரட்டுவதற்காக போதையில் கழுத்தில் சுருக்கிட்டவா்  உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

நிறை போதையில் உயிர்மாய்க்க போவதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் சுருக்கிட்டவர் கயிறு இறுகி ,  ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு L சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி நிறை போதையில் வீட்டுக்கு வந்தவர் , மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்டுள்ளார். அதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். அந்நிலையில் ,  வீட்டின் வெளியே இருந்த மரத்தில் கயிறொன்றினை கட்டி , அதன் மறுமுனையை தனது கழுத்தில் சுருக்கிட்டவாறு , மரத்தின் கீழ் இருந்த கட்டையில் அமர்ந்திருந்து , தான் உயிர் மாய்க்க போவதாக கூறி மனைவியை மிரட்டியுள்ளார். அது தொடர்பில் கணவனின் சகோதரனுக்கு மனைவி அறிவித்ததை அடுத்து , வீட்டுக்கு சென்ற சகோதரன் , கழுத்தில் கயிறு மாட்டிய நிலையில் , மது மயக்கத்தில் சரிந்து இருந்தவரை மீட்டு , கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றி , நிலத்தில் தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் ,  உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

Related Posts