பிரித்தானிய ஊடகமான BBC-க்கு எதிராக வழக்கு தொடர்வதில் உறுதியாக இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். BBC ஊடகத்தின் “பனோரமா” நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்பின் திருத்தப்பட்ட உரையின் காரணமாக அவர் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இருப்பதாக உறுதியாக கூறியுள்ளார். இதேவேளை, இந்தச் செயலுக்காக BBC மன்னிப்பு கோரியிருந்தாலும் , அது அவதூறு வழக்குக்காக கருதப்படுவதற்கான அடிப்படை இல்லை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். BBC தனது தவறை ஒப்புக்கொண்டாலும் இவ்வாறு அந்த ஊடகம் மேற்கொண்ட திருத்தப்பட்ட பதிப்பிற்காக பிபிசி ஊடகத்தின் மீது 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்வரை அபராதம் விதிக்க வழக்கு தொடரப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் றுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடபோவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி கேபிடல் கட்டிடத்தில் கலவரம் ஏற்படுவதற்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையை பிபிசி ஊடகம் திருத்தியமைத்து வெளியிட்ட பின்னணியிலேயே இந்த வழக்கு தொடரப்படஉள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலரை பெறுவதில் டொனால்ட் டிரம்ப் உறுதி! – Global Tamil News
4