உக்ரைன் தலைநகர் கீய்வின் பல மாவட்டங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி ரஷ்யா அதிரவைத்துள்ளது. குறைந்தது 11 பேர்கள் காயங்களுடன் தப்பிய இந்த தொடர் தாக்குதலை அடுத்து அவசர சேவைக் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். கர்ப்பிணிப் பெண் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைன் தலைநகர் மீதான தாக்குதல் தொடர்வதாகவும், மறு அறிவிப்பு வரும் வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அறைகளில் இருந்து வெளியே வரவேண்டாம் எனவும் கோரியுள்ளனர். அத்துடன், மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் முடங்கலாம் என நகர நிர்வாகம் எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், தலைநகரின் பல பகுதிகள் பற்றியெரிகிறது. இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியே இடிபாடுகள் நிறைந்த தெருக்களில் மக்கள் திரண்டுள்ளனர். ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த கீய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர், தலைநகரின் வெப்பப்படுத்தும் அமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீய்வின் மீது, ரஷ்யா தொடர் தாக்குதல்! – Global Tamil News
7
previous post