Sunday, August 24, 2025
Home tamil newsமேர்வினுக்கு பிணை – Global Tamil News

மேர்வினுக்கு பிணை – Global Tamil News

by ilankai
0 comments

நிலம் ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து பண  மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அவா் குற்றப் புலனாய்வுத் துறையால்     கைது செய்யப்பட்டிருந்தாா்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பராமரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இன்று (6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது

You may also like