தனது பெயருக்கும், கௌரவத்துக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக்கூடிய வகையிலும் இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவரிடம் 5 கோடி ரூபா (50 மில்லியன்) நஷ்ட ஈடுகோரி எனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளேன்.எனது அரசியல் நடவடிக்கையை அதாளபாதாளத்துக்குள் கொண்டு செல்லுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகின்ற வகையில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவை உண்மைக்குப் புறம்பானவை. அவர் தனது குற்றச்சாட்டுகளை நீதிமன்றில் ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கும் , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் , நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாக கூறப்படும் ஒளிப்பதிவு ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த நிலையிலையே அவற்றை வெளியிட்டார் என குற்றம் சாட்டியே குறித்த நபரிடம் நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கௌரவத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டது – 5 கோடி கேட்டு செல்வம் எம்.பி. வழக்கு!
4
previous post