கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உரையாற்றும் போது, 1981ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் நூல் நிலையம் எரிக்கப்பட்டது. இது மிகப்பெரிய துன்பியல் சம்பவம். எனவே சமூகங்களுக்கு இடையிலான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான புத்தக கையளிப்பு நிகழ்வுகள் உதவும் என நம்புவதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ். மாவட்டச் செயலர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
யாழ் . பொது நூலகம் எரிக்கப்பட்டது மிகப்பெரிய துன்பியல் சம்பவம் – Global Tamil News
4