யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு பிரதேசசபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும் விருது வழங்கலும் பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், எமது வலி வடக்கு பிரதேசமானது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்ட போதிலும் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது. குறிப்பாக 21 வட்டாரங்களாகக் காணப்படினும் 20 வட்டாரங்களே விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், பலாலி வடமேற்கு மற்றும் பலாலி மேற்கு ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படாத நிலையுள்ளது.
வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை – Global Tamil News
4