சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட காவல்துறை – Global...

சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட காவல்துறை – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்  காவல்துறையினர் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம்  அனுப்பபட்டிருந்தமை  காவல்துறை   விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனொரு கட்டமாக குறித்த நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக  காவல்துறை    தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts