Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவின் தேசிய மொழி எது? – ஸ்பெயினில் கனிமொழி கொடுத்த பதில்காணொளிக் குறிப்பு, இந்தியாவின் தேசிய மொழி எது? – ஸ்பெயினில் கனிமொழி கொடுத்த பதில்இந்தியாவின் தேசிய மொழி எது? – ஸ்பெயினில் கனிமொழி கொடுத்த பதில்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஸ்பெயின் நாட்டு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில், இந்தியாவின் தேசிய மொழி எது என்பது குறித்து திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உள்ளூர் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என இந்தியா கூறியது. இதன் பின்னர், மே 7 அன்று, பாகிஸ்தானுக்குள் பல இடங்களில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியாவின் சார்பில் எம்.பிக்கள் அடகிய தூதுக்குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் அந்நாட்டு பிரதிநிதிகள் இந்திய தூதுக்குழுவினருடன் கலந்துரையாடினர்.
அப்போது, இந்தியாவின் தேசிய மொழி எது என அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி, “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என பதிலளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு