Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் உறுதியுரையை எடுத்துக் கொண்டார். யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்கும் நிகழ்வு, நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையை மேற்கொண்டார்கள். இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட (விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்) சுந்தரமூர்த்தி கபிலனும் யாழ். மாநகர சபை உறுப்பினராக உறுதியுரையை எடுத்துக்கொண்டுள்ளார்.
“யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் மேயராக அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது. உறுப்பினராக நியமித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த அடுத்த நாளே அதனைத் தடுப்பதற்கு வழக்குத் தாக்கல் செய்வோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.