இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு பாதுகாப்புத்துறையின் பின்னணியை கொண்டவர்கள் நியமிக்க கூடாது – Global Tamil...

இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு பாதுகாப்புத்துறையின் பின்னணியை கொண்டவர்கள் நியமிக்க கூடாது – Global Tamil News

by ilankai

இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் பதிவு வெற்றிடங்களுக்கு , பாதுகாப்புத்துறையின் பின்னணியை சேர்ந்தவர்களை நியமிக்க கூடாது என தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது என அக் கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.  வவுனியாவில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஒருமனதாக தீர்மானித்து, பாதுகாப்பு த்துறையின் பின்ணியை கொண்ட  வசந்தா பெரேரா மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோரையும் இழப்பீடு செய்யும் அலுவகத்திற்கு நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி எழுத ஒருமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் என கூறி தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் (Office of Reparations) காலியாக உள்ள நான்கு பதவிகளுக்கான நிலுவையில் உள்ள நியமனங்களை தொடர்பாக இக்கடிதம் எழுதப்படுகிறது. இவ்வலுவகம்  உத்தேசமாக வட மற்றும் கிழக்குப் பகுதி உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு பொறிமுறை என பொதுவாக கூறப்படுகிறது. பெரும்பாலும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட மீறல்களுக்கு ஈடு செய்யும் வகையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.   தமிழ் மக்கள் எந்தவொரு உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையையும் அல்லது நல்லிணக்கத்தையும் நிராகரித்து வருகின்றனர்,  ஏனெனில் இந்நிறுவனங்களின் நியாயமான செயல்பாட்டிலோ சுயாதீனத்தன்மை அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.  பாதுகாப்பு துறை பின்னணி கொண்ட எந்தவொரு நபரும் இப்பதவிக்கு நியமிக்கப்படுவதால், எங்கள் மக்கள் இத்தனை நாட்களாக கூறிவந்ததும், அரசின் மனப்பான்மையையும் உறுதிப்படுத்தும் நிலை உருவாகும். சமீபத்தில் இழப்பீடு செய்யும் அலுவகத்திற்கு நான்கு பெயர்கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.  இதில் இருவர் பாதுகாப்பு துறை பின்னணி கொண்டவர்கள். இதற்கு மேலாக, ஐந்தாவது உறுப்பினர் மேஜர் ஜெனரல் என்பதும் குறிப்பிடத்தக்கது! எனவே, வசந்தா பெரேரா (முன்னர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்) மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்படின், ஐந்து உறுப்பினர்களில் மூவர் பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இத்தகைய அலுவகத்திற்கு ஒருவரும் அந்தத் துறையில் இருந்து வரக்கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts