மன்னார் தீவில் திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதில் இலங்கை அரசு உறுதியாகவுள்ளது.எனினும் உள்ளூர்வாசிகளின் அனுமதியின்றி புதிய திட்டங்களை வகுக்கப்பதில்லையென இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. உள்ளுர் மக்களது தொடர்ச்சியான எதிர்ப்பின் மத்தியில் எதிர்வரும் காலங்களில் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் தவிர்த்து மன்னாரில் புதிய காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில் மீள் புதுப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.ஏற்கனவே முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.ஏனைய திட்டங்களான 20 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இரண்டு தனியார் நிறுவனங்களால் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களை தவிர புதிய காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
திட்டமிட்டபடி காற்றாலை:சுத்துமாத்து அனுர அரசு!
4