950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சான்று பொருட்களாக  நீதிமன்றில் பாரப் படுத்தப்பட்டிருந்தது. அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து 950 கிலோ கஞ்சாவையும் தீயிட்டு அழிக்க மன்று உத்தரவிட்டது.   அதன் அடிப்படையில் கோம்பயன் மணல் மயான மின் தகன மேடையில் கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டது.  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் மற்றும் , மேலதிக நீதவான் ஆகிய இருவரின் நேரடி கண்காணிப்பில் அவை அழிக்கப்பட்டது.

Related Posts