Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் முதல்முறையாக பெண் கேடட்கள் – சாதித்த 17 பெண்கள்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் சேர்ந்த முதல் 17 பெண் கேடட்கள் மே மாத இறுதியில் தேர்ச்சி பெறவுள்ளனர்.
2022இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ-வில், 3 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக பெண் கேடட்டுகள் சேர்க்கப்பட்டனர்.
இந்த 17 கேடட்களைப் பின்பற்றி 109 இளம்பெண்கள் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளதால், இது வரலாற்றுச் சிறப்புமிக்கது.
“பொதுவாக பெற்றோர் தங்கள் குழந்தைகள் இஞ்சினியர் அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்புவார்கள். நான் ஜேஇஇ கோச்சிங் சென்றுகொண்டிருந்தேன். நான் 12ஆம் வகுப்பு முடிக்கும் நேரத்தில் பெண்களும் என்டிஏ-வில் சேரமுடியும் என்று தெரிய வந்தது. பிறகு நான் என்டிஏ-வில் சேர தேர்வு எழுதினேன். பிறகு மருத்துவ சோதனை நடந்து. எல்லாவற்றிலும் தேர்வாகி நான் என்டிஏ-வில் சேர்ந்தேன்” என்கிறார் இஷிதா சங்வான்.
“மகளிர் அதிகாரம் பெறுதல் என்ற வகையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் என் வீட்டிற்கு செல்லும்போது என் வீட்டில் உள்ள எல்லா பெண்களும். நீ சாதித்துவிட்டாய், எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று சொல்வார்கள். இதுவரை அவர்கள் சிந்தித்துக்கூட பார்க்காத பல விஷயங்கள் பற்றி இப்போது அவர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.” என்கிறார் இங்கு பயிற்சி பெற்றுள்ள பட்டாலியன் கேடட் கேப்டன் ரிதுல்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு