கிளிநொச்சியில் பொலிசாரை தாக்கிய குற்றம் – பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கைது

கிளிநொச்சியில் பொலிசாரை தாக்கிய குற்றம் – பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கைது

by ilankai

ஆதீரா Monday, November 03, 2025 கிளிநொச்சி கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ்பிரிவுக்குற்பட்ட கருங்காலி காட்டில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை பொலிஸார் சுற்றி வளைத்தனர். அதன்போது பொலிஸார் இருவரை தாக்கி விட்டு தப்பியோட முற்பட்ட ஏழு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாக்குதலுக்குள்ளான இரண்டு பொலிஸாரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Related Posts கிளிநொச்சி Post a Comment

Related Posts