மாணவரின் உயிாிழப்புக்கு பகிடிவதை காரணமா? – Global Tamil News

by ilankai

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளாா்.   எனினும் அவரது   உயிாிழப்புக்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகயீனம் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது  உயிாிழந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினா்  மாணவர் உயிரிழந்தபோது, ​​அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும்   குறிப்பிட்டுள்ளனா். எவ்வாறாயினும், இந்தத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனா். கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாக  குறிப்பிட்டுள்ள  உயிரிழந்த மாணவரின் சகோதரி தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை எனவும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைகள்  குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும்  கூறியுள்ளார்.

Related Posts