யாழில். சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது

by ilankai

யாழ்ப்பாணத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடற்கரையில் படகொன்றில் இருந்து கஞ்சா இறக்கப்பட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கஞ்சா போதைப்பொருளை படகில் இருந்து கரையில் இறக்கிக்கொண்டிருந்த மூவரை மடக்கி பிடித்தனர். மடக்கி பிடித்த மூவரையும் கைது செய்த பொலிஸார் , 47 பொதிகளில் காணப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவையும் ,  அவற்றை கொண்டு வந்த படகையும் பொலிஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் , மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.  

Related Posts