ஆகாஷ்தீர்: வான்பாதுகாப்பில் புதிய வரலாறு – முப்படைகளை ஒருங்கிணைக்கும் உள்நாட்டு தயாரிப்பு

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்புஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை மற்றும் அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதலில் பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

அப்போது பல்வேறு ஆயுதங்கள் பாதுகாப்பு அமைப்புகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்; வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு

“இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்பு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்டது என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தலைவர் சமீர் வி காமத் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின்போது, ‘ஆகாஷ்தீர்’ அமைப்பு மிகவும் வீரியமாக செயல்பட்டதாக இந்திய அரசு குறிப்பிட்டது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பு பற்றிய முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்வோம். “எதிரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தியது ஆகாஷ்தீர்” என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“இந்திய ராணுவம் மற்றும் சிவிலியன் பகுதிகளை பாகிஸ்தான் தாக்கியபோது, உள்வரும் அனைத்து ஏவுகணைகளையும் ஆகாஷ்தீர் இடைமறித்து செயலிழக்கச் செய்தது” என்று மேலும் குறிப்பிட்டது.

பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22ம் தேதியன்று நடைபெற்றத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட பின்னர், மே ஆறாம் தேதி பின்னிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் பல இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

தீவிரவாத மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் எதிர்தாக்குதல் தொடங்கிய நிலையில் இரு நாடுகளுக்குமான ராணுவ மோதல் மே பத்தாம் தேதி மாலை வரை தொடர்ந்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆகாஷ்தீர் அமைப்பின் சிறப்பம்சங்கள்

ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்பின் சிறப்பம்சங்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. “ஆகாஷ்தீர் என்பது தானியங்கி வான் பாதுகாப்புக் கட்டுப்பாடு அமைப்பாகும். எதிரி விமானங்கள் , டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டறிவதுடன், அவற்றை கண்காணித்து, எதிர்கொள்ளும் திறன் கொண்ட அமைப்பாகும்”.

“இறக்குமதி செய்யப்பட்ட HQ-9 மற்றும் HQ-16 அமைப்புகளை பாகிஸ்தான் நம்பியிருந்தது. ஆனால், அவை இந்திய தாக்குதல்களைக் கண்டறிந்து இடைமறிப்பதில் தோல்வியடைந்தன. ஆகாஷ்தீர் நிகழ்நேர அடிப்படையில் வான் பாதுகாப்புப் போரில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிரூபித்தது” என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“உலகின் எந்தவொரு ஆயுதத்தையும் விட வேகமாக தாக்குதலைக் கண்டறிந்து, அதை முறியடித்து ஆகாஷ்தீர் தனது வல்லமையை நிரூபித்துக் காட்டியுள்ளது.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மே 6-7 இடைப்பட்ட இரவில், இந்தியா பாகிஸ்தானின் பல இடங்களைத் தாக்கியது’ஆகாஷ்தீர்’ எப்படி வேலை செய்கிறது?

ஆகாஷ்தீர் C4ISR (கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவு) கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

ஆகாஷ்தீர் அமைப்பில் நிறுவப்பட்ட சென்சார்களில் தந்திரோபாயக் கட்டுப்பாட்டு ரேடார் ரிப்போர்ட்டர், 3D தந்திரோபாயக் கட்டுப்பாட்டு ரேடார், குறைந்த அளவிலான இலகுரக ரேடார் மற்றும் ஆகாஷ் ஆயுத அமைப்பு ரேடார் ஆகியவை அடங்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.

“ஆகாஷ்தீர் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என மூப்படைகளையும் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டது. இது தற்செயலாக நமது சொந்த இலக்குகளையேத் தாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. வாகனம் ஒன்றில் பொருத்தப்படுவதால், ஆகாஷ்தீர் விரைவாக நகரக்கூடியது, எனவே கடினமான மற்றும் போர் நடைபெறும் பகுதிகளில் நிலைநிறுத்துவதற்கு ஏற்றது” என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உலகின் வேறெந்த அமைப்பையும் விட வேகமாகக் கவனிக்கவும், முடிவெடுக்கவும், தாக்கவும் ஆகாஷ்தீர் பயன்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ‘ஆகாஷ் தீர்’ இலக்கு துல்லியமானது என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளதுவான் பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன?

வான் பாதுகாப்பு அமைப்பு என்பது ஒரு நாட்டின் வான் எல்லைகளை எதிரி விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் ராணுவ அமைப்பாகும்.

இந்த அமைப்பில் ரேடார், சென்சார்கள், ஏவுகணை மற்றும் துப்பாக்கி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வான்பாதுகாப்பு அமைப்புகளால், வான்வழி அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டு, பின்னர் கண்காணிக்கப்பட்டு, அவற்றை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

வான் பாதுகாப்பு அமைப்பு பல கட்டங்களில் செயல்படுகிறது. அச்சுறுத்தலைக் கண்டறிதல், அச்சுறுத்தலைக் கண்காணித்தல் மற்றும் அது பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதற்கு முன்பு அதை நீக்குதல் என வான் பாதுகாப்பு அமைப்பு வெவ்வேறு கட்டங்களில் இயங்குகிறது.

ஒரு நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய நோக்கம், மக்களையும் ராணுவ தளங்களையும் வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதாகும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு