Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது.
ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது.
தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
மேலும் அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் ஊர்ஐமுஏ பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
இந்த புதிய பிறழ்வுகளில் சில முன்னர் வகைப்படுத்தப்படாததால், அவை கொசுக்களுக்குள் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவது முக்கியமானதாகும்.