தனது நேர்மையையும் மனிதாபிமானத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என குற்றம் சுமத்தியுள்ளார் ச.சிவயோகநாதன்{சீலன்} மனித உரிமைச் செயற்பாட்டாளர்(மட்டக்களப்பு)கடந்த 22ம் திகதி அன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள றிவேரா விடுதியில் பாதிக்கப்பட்டமக்கள், சிவில் சமூகத்தினர், சமயத் தலைவர்கள் என சுமார் 50 க்கு மேற்பட்டோரை அழைத்து “மௌனத்தின் எதிரொலிகள்” என்ற கவிதைத் தொகுப்புக்கள் அடங்கிய புத்தக வெளியீடு ஒன்றினை வெளியிட்டு ,தமது மனிதாபிமான சேவைகளையும் நடுநிலையான சேவைகளையும் எடுத்தியம்பினர். அவர்கள் வெளியிட்டு இருந்த புத்தகத்திலும், சரி பேச்சிலும் சரி ” காணாமல் போனோர்” என்ற சொற் பதத்தினைத்தான் வரிக்கு வரி உபயோகித்தார்கள்.ஏன் நீங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதத்தினை உபயோகிக்கவில்லை.அவர்கள்தானே பெரியளவில் போராட்டங்களை நடாத்தி நீதிக்காக நீண்ட நாட்களாக போராடுகிறார்கள் என்ற கேல்வியை முன்வைத்த போது அவர்கள் தந்த விளக்கம் ஆச்சரியத்தையும் வியப் பையும் ஏற்படுத்தியது.அதாவது பாதிக்கப்பட்ட மேற்படி சமூகத்தினரை ஒரே சொல்லில் உள்வாங்குவதானால் காணாமல் போனோர் என்ற சொல்லைத்தான் தம்மால் கூற முடியும் என தமது அமைப்பு உத்தியோக பூர்வமாக தீர்மானித்துவிட்டதாக தெரிவித்தனர்.அப்படியானால் காணாமல் போனோர் மற்றும் காணாமலாக்க ப்பட்டோர் என்ற இரு சொல்லையும் இணைத்து உபயோகிக் கலாம்தானே.உண்மையாக நீதி கோருவோரை புறக்கனிப்பது எந்த வகையில் நியாயம்? எனவும் கேட்க தோன்றுகிறது.அதுமட்டுமல்ல ஒருபடி மேலேபோய் பாதிக்கப் பட்ட மக்களுக்காக நேரடி ஆதரவு வழங்கினால் தம்மால் இலங்கையில் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போகும் எனவும் தெரிவித்தனர்.அப்படியானால் அநீதி இழைத்தவர்களைத் திருப்திப் படுத்துவதுதான் உங்கள் நோக்கமா?இதுதான் உங்களது நடு நிலையும் ,மனிதாபிமா னமும்?காணாமல் ஆக்கப்பட்டோ ர் என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர்களைக் காணாமல் ஆக்கியது யார் என்ற கேள்வி இங்கு தானாகவே எழுப்பப்படு கிறது. இதில் பொறுப்புக் கூறல் என்பது தவிர்க்க முடியாதாகின்றது. எனவே, தமது செயற்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது போலும். அத்துடன் காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.அவர்களும் தமது பணிகளை எப்படி முன்னெடுத்துச் செல்கின்றனர் என்ற விடயங்களையும் எடுத்துக் கூறினர். காணாமல் போனோர் அலுவலக பணியாளர்களும் தமது கருத்துக்களை முன்னெடுப்பதற்கான புற நிலைச் சூழலும் ஏற்படுத்தப் பட்டிருந்தது.சரி யார் அந்த காணாமல் போனோர் என்ற விடயங்களை ஆராய்வோமானால் – நாட்டைவிட்டு ஓடி ஒலிந்து வாழ்வோர்- படகுகளில் புலம்பெயர்ந்து பயணம் செய்து காணாமல் போனோர் – தமது விருப்பத்துடன் அரச படையில் சேர்ந்து காணாமல் போனோர் இதுபோன்ற இன்னும் பலர் காணாமல் போனோர் பட்டியலில் இணைக்கலாம். மேற்கூறப்பட்ட தரப்பில் அனேகமானோர் தாமாகவே தம்மை சுய விருப்பத்துடன் காணாமலாக்கியவர்கள் என்பதுதான் உண்மை .குறிப்பாக அரச முப்படை களிலும் இருந்து காணாமல் போனோர்.இவர்களது சேவைக் காலங்களில் இவர்களுக்கு ஏற்படும் அணைத்து விதமான இழப்புகளுக்கும் ஏதோவொரு வகையில் அரசினால் அதற்குரிய இழப்பீடுகள், சட்டத்தின் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.ஆனால் இதே படையினரிடம் கையலித்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எவ்வித பரிகார நீதியும் கிடையாது .அதுமட்டுமல்ல அவர்களது அமைப்பின் பெயரைக் கூட அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர்} என்ற சொல்லைக்கூட அவர்களால் உச்சரிக்க முடியவில்லை என்றால் என்ன நியாயம்?சர்வதேச செஞ்சிலுவை சங்கமானது 2000 பேரது தகவல்களைச் சேகரித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டதாகவும் அதில் 40%க்கு மேற்பட்டோர் மரணச் சாண்றிதழ்களைப் பெற்றுள்ளதாகவும் கூறினர். இதில் அனேகமானோர் வடமத்தி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் வெளியிட் டனர்.அப்படியானால் காணாமலாக்கப் பட்டோரது அலுவலகம் செய்து வரும் பணிகளை தாங்களும் மதிப்பீடு செய்து ஒத்துழைக்கிறீர்கள்.உண்மையாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் OMP அலுவலகம் வேண்டாம் என போராடி வரும் நிலையில் அவர்களுக்கான நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொடுக்க பின்னடிப்பது ஏன்? அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் உங்களுக்கு விளங்க வில்லையா? இந் நிலையில் தங்களைத் தாங்களே மணிதாபிமா னம் மற்றும் நடுநிலையான அமைப்பு என்று கூறுவதில் என்ன உண்மைத்தன்மை உள்ளது.அத்துடன் மேலும் ஒரு தரவு அவர்களால் முன்வைக்கப்பட்டது. இதில் 365 பேர் முப்படையிலும் இருந்து காணாமல் போனவர்கள் . என்ற தகவல்களையும் தங்களது ஆய்வறிக்கை மூலம் கண்டறியப் பட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால் படையினரால் கானாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை எத்தனை என்பதனை அவர்கள் குறிப்பிட தவறிவிட்டனர்.அப்படியானால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து காணாமல் போனோரது விபரம் உங்களிடம் உள்ளனவா? என்ற வினாவும் எழுப்ப பட்டது. அதற்கு பதிளலிக்கையில், அவர்கள் தொடர்பில் சில தாய்மார் மேற்படித் தகவலைச் சொல்லாமல் பதிந்துள்ளார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.மனிதாபிமானம் மற்றும் நடுநிலையுடன் பணியாற்றுபவர்களானால் உத்தியோக பூர்வ மாக விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந் த போது பல்வேறுபட்ட தரப்பினராலும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி கள் உறுப்பினர்களது தகவல்களையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் புலப்பட்டது.அத்துடன் அவர்களால் வெளியிடப்பட்ட “மௌனத்தின் எதிரொலிகள்” என்ற புத்தகத்தில் மூன்று மொழிகளிலும் ஆக்கங்கள் காணப்படு கின்றது.அதாவது காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் என இரு சமூகத்தினரது ஆக்கங்களையும் ஒன்றாக இணைத்து.இங்கு இரு சமூகமும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுகின்றனர். என்ற விம்பத்தினை இச் செயற்பாடு சர்வதேசத்திற்கு பறை சாற்றி நிக்கின்றது. அத்துடன் கவிதையின் 13ம் பக்கம் “அன்புக்குரிய வீர மகனே”என்ற தலைப்பில் மல்லிகா ஜெயசிங்ஹ என்ற சிங்களச் சகோதரி எழுதியுள்ள கவிதையின் மூன்றாவது வரியில் கூறியுள்ளார் “கோரப் புலிகளி்ன் கோரப் பசியில் உன்னைப் பறித்துச் சென்றார்கள் .என்ற ஒரு சொல்லும் காணப்பட்டது.மதிய உணவிற்காக எல்லோரும் சென்று, திரும்ப வந்து பார்க்கும் போது எல்லோரது புத்தகங்களிலும் 13 ம் பக்கத்தில் அந்த சொல் மிக கடுமையாக அழிக்கப் பட்டிருந்தது.அதனை தாங்களே செய்ததாகவும் குறிப்பிட் டனர். ஒரு தரப்பை மட்டும் பகிரங்கமாக குற்றம் சுமத்திய ஆக்கத்தினை நீங்கள் எப்படி உள் வாங்கினீர்கள் . இதுதான் உங்கள் நடு நிலையா? அந்த மண்டபத்தில் கடுமையான கேள்விகள் எழுந்ததன் காரணத்தினால் அவர்கள் அதனை அழித்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் பல ஆயிரக் கணக்கான புத்தகங்களை அச்சிட்டு வெளியீடு செய்த பின்னர் எங்களுக்கு முன் வைத்திருந்த புத்தகத்தில் மட்டும் அழிப்பதனால் உங்களால் அச்சடிக்கப்பட்டிருந்த முழு அச்சுப் பிரதிகளும் அழித்தமைக்கு சமனாகு மா? இது தானா உங்கள் தர்மம்?இதுதான் உங்கள் நீதியா?எனவே எந்த வகையிலும் சர்வதேச பொறிமுறையுடனான நீதி கோரலுக்கும் இம்மாதிரியான அமைப்புக்கள் எமக்கு துணை நிக்கப் போவதில்லை. என்பது அன்றைய கலந்துரையாடல் மற்றும் செயற்பாடுகள் எமக்கு நிருபித்து நிக்கின்றன.அவர்கள் தொடர்ந்து ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடாத்துவதாகவும் அவை சுமுகமான முறையில் நடைபெறுவதாகவும் கூறினார்கள்.ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து உள்ளக பொறிமுறைக்குள் ஓர் கண் துடைப்பு தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலில் இருந்து அரசைக் காப்பாற்றுவதே இவர்கள் நோக்கமாகும்.எனவே வடக்கு கிழக்கு காணாமலாக்கப் பட்டோர் சங்கமானது தீர்கமான சில முடிவுகளை மிக காத்திரமான வகையில் விரைவாக எடுக்க வேண்டிய காலமிது என்பதனை நீதியின் பக்கமாய் நின்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்ள்.அத்துடன் அன்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறுபதாவது கூட்டத் தொடரில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற பண்ணாட்டு நிறுவணங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப் பட்ட மக்கள் சார்பில் எமது அதிர்ப்திகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம் இம்மாதிரியான அமைப்புக்களுடன் இணைந்து பயணிப்ப தால் எமது பலம் பல வகையிலும் பலவீனப்படுத்தப்படுகிறது. என்பதனையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.எனவே காணாமல் போனோர் என்று கூறப்படும் படைத் தரப்பின் கவிதைகளும் படைத் தரப்பால் காணாமலாக்கப்பட்டோ ரது ஆக்கங்களும் ஒரே அமைப்பில்,ஒரே புத்தகத்தில், இணைந்து இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்க விடயமில்லை. அநீதி இழைத்தோரையும் அநீதிக்கு எதிராக நீதியை கோருவோரையும், எப்படி ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியும்.அதே நேரம் போர்க்காலத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பல காத்திரமான பணிகளையும் செய்துள்ளனர் என்பதனையும் நாம் மறப்பதற்கில்லை என அவர் தெரிவித்துள்ளார்.அதிலொரு பகுதியாக மரணித்த இரு பகுதியினரது வித்துடல்களையும் பரிமாறும் உன்னத பணிகளையும் மேற்கொண்டிருந்தீர்கள்அவற்றில் சில நூற்றுக் கணக்கான படையினரது உடலங்கள் தங்களுடையது இல்லை என அரச தரப்பினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட அனுபவங்களும் உங்களுக்கு உண்டு.அந்த உடலங்களுக்கு சொந்தக்காரர்கள் இன்று காணாமல் போனோர் பட்டியலில் தங்களையும் இணைத்துக் கொண்டு காணாமல் போனோராக தேடப்பட்டுக் கொண்டிரு க்கலாம். இவை எல்லாம் தங்களுக்கு தெரியாத விடயங்களாக இருக்க வாய்ப்பில்லை.எனவே உண்மையில் மரணித்தவர்களுக்கு மரணச் சாண்றிதழ்கள் வழங்குவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. குறிப்பாக முப்படைகளிலும் இருந்து காணாமல் போனோர். ஏனென்றால் அவர்களை இப்போது உள்ள சூழ்நிலையில் யாராவது கடத்தி உயிருடன் வைத்திருப்பதற்கு எந்த வாய்ப்புமில்லை.அதனால்தான் கூறுகின் றோம் படையில் இருந்து காணாமல் போனோரை, காணாமல் போனோர் பட்டியலில் இணைத்து தேடுவது என்பது ஒரு மடைமாற்றும் செயல்ப் பாடாகும்.காணாமல் ஆக்கப்பட்டோர் நிலை அப்படியல்ல தற்போதும் இறைமையுள்ள அரசு என்ற வகையில் படைத் தரப்பிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு பொறுப்பு கூறியே ஆக வேண்டும்.நன்றி.
13
previous post