யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி மாட்டிறைச்சியை முச்சக்கர வண்டியில் எடுத்து சென்ற நபரை காவல்துறையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

மருதங்கேணி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பெருநாள் இடம்பெற்றுள்ளது. அதனை அடுத்து திருவிழா முடிவடைந்த பின்னர் அப்பகுதி மக்களுக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யலாம் எனும் நோக்குடன் , முச்சக்கர வண்டியில் ஒரு தொகை மாட்டிறைச்சியை எடுத்து சென்ற வேளை மருதங்கேணி பகுதியில் வைத்து காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை மருதங்கேணி காவல்துறையினர்  காவல நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.