சிங்கள திரையுலகின்  பிரபல நடிகையும், நாடகக் கலைஞரும், இயக்குநருமான “இலங்கை சினிமாவின் ராணி” என்று  கருதப்படும் மாலினி பொன்சேகா இன்று (24.05.25) அதிகாலை காலமானார்.

அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 78 ஆவது வயதில் காலமானார்.

யார் அவள் (1976, மொழி மாற்றத் திரைப்படம்) நடிகர் திலகம் சிவாஜி எணேசனுடன் இணைந்து பைலட் பிரேம்நாத் (1978)
மற்றும் மல்லிகை மோகினி (1979) பனி மலர்கள் (1981) ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதேவேளை ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.  மகிந்த ராசபக்சவிற்கு இவர் அளித்த வலுவான ஆதரவைப் பாராட்டி   அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.