காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திலும் சடலங்கள் மீட்பு! – Global Tamil News

by ilankai

கொழும்பு, மட்டக்குளி  காவல்  நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திற்கு அருகிலும் இந்த இரண்டு அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என காவற்துறையினர்  தெரிவித்தனர். குறித்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு, தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. Spread the love  காக்கைத் தீவு கடற்கரைகொழும்புசடலங்கள் மீட்புமட்டக்குளி

Related Posts