நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற தேசிய மக்கள் சக்தியினர் தயாரித்து வெளியிட்ட பாடல்கள் தலையிடியாக மாறத்தொடங்கியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையை கைபற்றி ஆட்சியமைத்த பின்னர் தலைவர் பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்திருந்தனர்

இந்நிலையில் தற்போது குத்துக்கரணமடித்துள்ளதுடன் சிலை அமைப்பது தொடர்பில் தான் ஒருபோதும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர. நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. நாட்டில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரமே அதுவாகும்.

எங்கள் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்கிய எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட நான் இதுவரை எங்கும் கூறியதில்லை. அவ்வாறான நான் வேறு ஒருவருக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா? அந்த வகையில் மேற்படி கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.