வெள்ளவத்தை ஹெவ்லாக் சிட்டி வீட்டுத்தொகுதியில் இரண்டு பெண்களுடன் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவற்துறை  மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்தார். பதில் காவற்துறை  மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. அனுராதபுரம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சமையல்காரராகப் பணியாற்றிய ஒருவர், இரண்டு பெண்களுக்கும் துப்பாக்கியைக் கொடுத்ததாகக் கூறப்படும் நபர், வெள்ளவத்தை காவற்துறையினரால் ருவன்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்