யாழில்.ஹெரோயினுடன் மூவர் கைது! யாழில் ஹெரோயினுடன் கைதானவர் காவற்துறையின் காவலில்! by admin October 29, 2025 written by admin October 29, 2025 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை காவல் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. பொம்மை வெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபரை கைது செய்த காவற்துறையினர் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டிருந்தனர். அதனை அடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என காவற்துறையினர் மன்றில் விண்ணப்பம் செய்தனர். காவற்துறையினரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , சந்தேகநபரை காவற்துறையின் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது. யாழில்.ஹெரோயினுடன் மூவர் கைது! யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண நகர் பகுதி , கொக்குவில் மற்றும் பொற்பதி பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில்.ஹெரோயினுடன் மூவர் கைது! – Global Tamil News
5