Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ராஜபக்ஷக்களையும், கடந்த அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உப்பு பிரச்சினைக்கு தீர்வு காணாதவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே,.
உணவின் அடிப்படை பொருளாகவே உப்பு காணப்படுகிறது. ஆகவே உப்பு உற்பத்தியில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணுங்கள்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ‘ நானும் இராணுவ வீரன் ‘ என்று குறிப்பிட்டுக் கொண்டு திரிந்தவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள்.
இராணுவத்தில் சேவையாற்றிய பலர் இன்று ஆளும் தரப்பில் உள்ளார்கள். பலர் பதில் அமைச்சர்களாகவும் உள்ளார்கள்.
இராணுவ வீரர்களை வீரர்கள் என்று குறிப்பிடும் தற்றுணிபு இவர்களுக்கு கிடையாது. தேர்தலுக்கு முன்னர் இராணுவ வீரர்களை சிப்பாய் என்று குறிப்பிடவில்லை.
அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் போது அதனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள். என்றார்.