தமிழக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த வடக்கு கடல்தொழிலாளர் இணையத்தினர்

யாழ்ப்பாணத்திற்கு  தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கற்

யாழ்.தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரியும், அத்துமீறல்களால் வடமாகாண மீனவர்கள் எதிரநோக்கும் பிரச்சனைகள், நட்டங்கள் தொடர்பிலும் சட்ட மன்ற உறுப்பினரிடம் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தினர் எடுத்துக் கூறியுள்ளனர்.