Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணொளிக் குறிப்பு, லண்டனில் 38,000 இந்திய பெண்கள் உள்ள சமூக குழுவை இவர் உருவாக்கியது ஏன்?’காபி மற்றும் கதைகளை பகிர்கிறோம்’ – லண்டனில் 38,000 இந்திய பெண்கள் உள்ள சமூக குழு
2 மணி நேரங்களுக்கு முன்னர்
“நான் லிவினா ஷெனாய், லண்டன் மற்றும் பிரிட்டனில் உள்ள இந்திய பெண்களுக்கான அமைப்பின் நிறுவனர்.”
பிரிட்டன் சென்ற போது இந்தியாவைப் போன்று இங்கு சமூக குழு இல்லை என அறிந்தார்.
“2022, பிப். 2ம் தேதி லண்டன் வந்தேன். மதியம் 2 மணிக்கே இங்கு சூரியன் மறைந்து விடுகிறது. ஒரு வாரத்திலேயே எனக்கு தனிமை, மன அழுத்தம் ஏற்படப் போகிறது என உணர்ந்தேன். புதிய நாட்டில்நான் விரும்பியது இதுவல்ல.” என்கிறார் அவர்.
தன்னைப் போன்ற மற்ற பெண்களை தேடினார்.
“காபி அருந்த யாருக்காவது நேரமிருக்கிறதா?” என ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதற்கு பலரும் பதிலளித்தது ஆச்சர்யமாக இருந்தது.” என கூறுகிறார் ஷெனாய்.
மெசேஜ் குழுக்களையும் அவர் உருவாக்கினார்.
“வாட்ஸ் அப் குழு உருவாக்கிய போது உடனே சுமார் 5,200 பேர் இணைந்தனர், அவர்கள் லண்டனில் தொடர்புகளை தேடிக் கோண்டிருந்தனர். என்னைப் போன்றே இருக்கும் பெண்கள் இவர்கள். தனிமை, மன அழுத்தத்தை எதிர்கொண்டவர்கள், நாங்கள் காபி, கதைகளை பகிர்ந்தோம். லண்டனில் எங்களின் பயணம் குறித்து பகிர்ந்தோம். 30 பேருடன் தொடங்கிய இந்த சந்திப்பு, தற்போது 38,000 பேருடன் வலுவான குழுவாக தொடர்கிறது.” என கூறுகிறார் அவர்.
கோவிட் 19 காலத்தில் இருந்து பலரும் தனிமையாக உணர்வதால் உடல்-மன நல பாதிப்பதாக சுகாதார குழுக்கள் கூறுகின்றன. 2026ல் இதுபற்றிய தரவுக்கு சமூக தொடர்பு குறித்த சிறப்பு ஆணையத்தை உலக சுகாதார மையம் அமைத்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு