Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ் இன அழிப்பு உள்ளிட்ட பதங்களை பயன்படுத்தி கோசங்கள் மற்றும் பதாதைகள் வைக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார்.
தொலைக்காட்சியி விவாதத்தில் தமிழினப்படுகொலை நடந்ததா என்கிற கேள்வி விஜிதஹேரத்தை நோக்கி முன்வைக்கப்பட்டது.
இராணுவம் பொதுமக்களை எப்பொழுதும் கொன்றதில்லை என்கிற வழமையான சிங்கள இனவாத அரசின் கருத்தை அவர் ஆணித்தனமாக கூறினார்.
அத்தோடு இனப்படுகொலை என்ற வசனத்தை இலங்கையிலும் பாவிக்கின்றார்கள் என்ற கேள்விக்கு இனிப்பாவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.