யாழில். போதைப்பொருளுடன் 06 பேர் கைது

by ilankai

ஆதீரா Friday, October 24, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.ஒரு சந்தேக நபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும் ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  Related Posts யாழ்ப்பாணம் Post a Comment

Related Posts