Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2ம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிவசேனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒய்வு நிலை பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், மதத்தலைவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர கலந்துகொண்டனர்.