பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை கைது செய்துள்ளதாக  இந்திய அதிகாரிகள்  தொிவித்துள்ளனா்.

இந்தியாவில்  சதிமுயற்சிகளை மேற்கொள்வதற்காக எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவச் செய்வதாகவும்   அதற்காக இந்தியாவில் பணத்துக்காக  நபா்களை  பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி வேலையில் ஈடுபடுவதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னா் இந்தியாவில் பாகிஸ்தானின் உளவு   வலையமைப்பை தகர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்ற  நிலையில்    பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 11 பேரை  சமீபத்தில் கைது செய்துள்ளதாக அதிகாரிகள்  தொிவித்துள்ளனா்.