காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

மதுரி Tuesday, May 20, 2025 வவுனியா

வவுனியா – கன்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கன்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவரே  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

வவுனியா

NextYou are viewing Most Recent Post Post a Comment