Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வடமராட்சி கிழக்கு தாளையடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கியில் இருந்து நீர் வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் காலை 8.30க்கு சமய நிகழ்வுடன் ஆரம்பானது.
நிகழ்வில் பிராந்திய பொறியியலாளர் உதயசீலன், யாழ் மாவட்ட பொறுப்பதிகாரி யசோதரன், பருத்திதுறை நீர் வழங்கல் சபை பொறுப்பாளர் மதிவாணன், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் இராகவன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நீர் விநியோக செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர்.
யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.