Homeசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!

ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் வெளிவிவகார அமைச்சர

பூனைக்கு சித்திரவதை : இளைஞனுக்கு விளக்கமறியல்
மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துங்கள்!
ஆபரேஷன் சிந்தூரின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கிறது பாகிஸ்தான்
கேணல்.கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 33 ஆவது ஆண்டு நிiனெவழுச்சி நிகழ்வு. யேர்மனி ,நெற்றெற்றால்
திருமலை:பிணை இல்லையா?


ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடரில் இணைத் தலைமை தாங்குவதற்காக ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர்  பவோலா பம்பலோனி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை ஆற்றிய முக்கிய பங்கிற்கு இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் நன்றி செலுத்தினார்.
அத்துடன் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.