Homeசெய்திகள்

வனிந்து ஹசரங்க தொடரிலிருந்து விலகல்

உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஓமான் ‘SADH’ , கொழும்பை வந்தடைந்தது
கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்
யாழ். பொன்னாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!
எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி
மக்ரோன் புடினுடன் உரையாடலை விரும்புவதால்: தயார் என்கிறது கிரெம்ளின்!


உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக  தொடரிலிருந்து விலகவேண்டியஏற்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்கவிற்குப் பதிலாகத் துஷான் ஹேமந்த அணியில் இணைத்துக்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வனிந்து ஹசரங்கவிற்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையின் முடிவில், அவரது உபாதை குணமடையாத காரணத்தினால், அவர் இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்படுவதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணி பங்கேற்கும் அடுத்த போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி ஓமான் அணியுடன் பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.