Homeசெய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விசேட பாதுகாப்பு

கொழும்பில் எதிர்வரும் 15-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு-20  கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு

இ – 20 உலகக் கிண்ண விலகலில் பங்களாதேஷுக்கு தண்டமில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை
திருமலை:பிணை இல்லையா?
ஜே.வி.பியின் முன்னாள் பா. உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்
யாழில். ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு – சிறுவன் உயிரிழப்பு ; இருவர் கைது
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் கொடூரமானது புதிய சட்ட வரைவு!


கொழும்பில் எதிர்வரும் 15-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு-20  கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, இப்போட்டியில் பங்கேற்கப்போவதில்லை எனப் பாகிஸ்தான் முன்னர் எடுத்திருந்த முடிவை, இலங்கையின் இராஜதந்திர தலையீட்டிற்குப் பின்னர் மாற்றிக்கொண்டமைக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பிராந்திய நாடுகளுக்கு இடையிலான விரிசல்களைக் குறைத்து, நட்புறவை வளர்க்க கிரிக்கெட் விளையாட்டை ஒரு பாலமாகப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமருடன் மேற்கொண்ட விசேட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் அணி போட்டியில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து அணிகளுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை இலங்கை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, போட்டி நடைபெறும் தினத்தன்று ரசிகர்களின் வருகையைக் கருத்திற்கொண்டு பொலிஸார் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.