விவாகரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோஹோ நிறுவனத்தின் இணை நி
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு தொடர்பாக தனக்கு உதவ ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் வசிக்கும் சாட்சிகளான ஸ்ரீதர் வேம்பு, அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் பிரதிநிதிகள் ஆகியோரின் சாட்சியங்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.தனபால், இது குறித்து ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23-க்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.இவர்கள் 1993-ல் திருமணம் செய்து கொண்டனர். சுமார் 30 ஆண்டுகள் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். 2019-ல் ஸ்ரீதர் வேம்பு இந்தியா திரும்பியதை அடுத்து 2021-ல் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஸ்ரீதர் வேம்பு தன்னையும், தனது மகனையும் கைவிட்டு விட்டுச் சென்றதாக பிரமிளா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.