Homeசெய்திகள்

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் – நடந்தது என்ன?

மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூ​யின்’ மற்​றும் இன்​ஸ்​டா கிராம் பக்​கங்​களில் வீடியோ ஒன்றை அவர் வெள

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் – யாழில். உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவிப்பு
எம்பிக்களே விடுதலைக்கு தடையாம்!
கிவுல் ஓயா திட்டம் குறித்த சர்ச்சை தொடர்கிறது…
எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி
துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்


மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூ​யின்’ மற்​றும் இன்​ஸ்​டா கிராம் பக்​கங்​களில் வீடியோ ஒன்றை அவர் வெளி​யிட்​டார்.
அதில், மூன்று சிறு​வர்​கள் கே.எஃப்​.சி உணவகத்​தில் கோழி இறைச்​சியை உண்​டு​விட்​டு, மீதமிருந்த எலும்​பு​களை வீணாக்க விரும்​பாமல் அதனைச் சாதத்​துடன் கலந்து ஒரு ஆதர​வற்ற முதி​ய​வருக்கு வழங்​கு​கின்​றனர். ”இன்று நாம் ஒரு நற்​செயல் செய்​யப் போகிறோம்” என்ற பின்​னணி குரலுடன் அந்த வீடியோ தொடங்குகிறது.
இந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி நெட்டிசன்களிடையே கடும் கொந்​தளிப்பை ஏற்​படுத்​திய நிலையில், அந்த இன்​ஸ்டா பிரபலம் மீது வழக்​குப் பதிவு செய்யப்பட்​டது.
இது தொடர்​பான விசா​ரணை​யின்​போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், ”இது ஒரு தர்ம காரி​யம் அல்ல; பொது​மக்​களின் கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக​வும், பொழுது​போக்​கிற்​காக​வும் ஒரு மனிதனின் வறுமையை சுரண்​டும் திட்​ட​மிட்​டச் செயல்” என்று வாதிட்​டார். பாதிக்​கப்​பட்ட ஆதர​வற்ற முதி​ய​வரும் இந்​தச் செயலால் தான் மிகுந்த மனவேதனை​யும், கோப​மும் அடைந்ததாகத் தெரி​வித்​தார்.
தனது செயலுக்கு மன்​னிப்​புக் கோரிய டேங் சீ லுக், குறைந்​த​பட்ச அபராதம் விதிக்​கு​மாறு கோரி​னார். இருப்​பினும், இதுபோன்ற செயல்​கள் இனி தொட​ராத வண்​ணம் கடுமை​யான தண்​டனை வழங்​கப்பட வேண்​டும் என்று நீதி​மன்​றம் கூறியதுடன், அவருக்கு ரூ.9.2 லட்​சம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தது.
தீர்ப்பு வெளி​யான சில நிமிடங்​களி​லேயே அந்த பிரபலம் அபராதத் தொகை​யைச் செலுத்​தி​ய​தாகத் தகவல்​கள் தெரிவிக்கின்​றன. சம்​பந்​தப்​பட்ட வீடியோவை நீக்​கி​யுள்ள அந்த இளைஞர், ”இந்​தச் சம்​பவத்​துக்காக நான் மனதார வருந்​துகிறேன். இனி என்னை முழு​மை​யாக மாற்​றிக்​கொண்டு பொது​மக்​களுக்கு முன் தோன்​று​வேன்” என்று தனது இன்​ஸ்​டா கி​ராம் பக்​கத்​தில்​ பதிவிட்​டுள்​ளார்​.