Homeசெய்திகள்

பௌத்த பிக்குகள் உட்பட 10 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சங்கமித்தை விகாரைகக்கு முன்பாக, செவ்வாய்க

துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை
இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.
யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சங்கமித்தை விகாரைகக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (10) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பிக்குமார் உட்பட 10 பேருக்கு எதிரான வழக்கு புதன்கிழமை(11) அன்று திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் என்பவற்றில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றை அமைத்து,அதில் புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 4 பிக்குகள் உட்பட 10 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது