Homeசெய்திகள்

பொறியில் சிக்கி சிறுத்தை பலி

பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டு பன்றிகள் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சி

நேட்டோவின் கரங்களா? சதித்திட்டம், ரகசியப் போர்கள் மற்றும் ஐரோப்பாவின் பிளவு
“போட்டித் தேர்வை நடத்தக்கூட துப்பில்லாத திமுக அரசு” – அன்புமணி ஆவேசம்!
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு!
திருகோணமலையில் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை!


பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டு பன்றிகள் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி, சுமார் 4 அடி நீளமான அரிய வகை மலைச் சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
தோட்டத் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இதனைக் கண்டு பொகவந்தலாவ  பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுத்தை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத வேட்டையாடல் முறைகளால் எமது நாட்டின் அரிய வகை உயிரினங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொறியிட்ட  நபரைக் கண்டறிய வனவிலங்கு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சிறுத்தை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டு நீதிவான் உத்தரவுக்கமைய உடற்கூற்று பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளது என நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்