வடமாகாணசபையின் ஆசிரிய இடமாற்ற விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ளது.அவ்வகையில் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு வடமாகாண கல்வி திணைக்களத்தால் வழங்கப்பட்ட இடமாற்றம் முறையற்றது எனத் தெரிவித்தும் வடமாகாண கல்வி திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்ற கட்டளைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரியும் ஆசிரியர் ஒருவரால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் ஆசிரியர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கின் விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆசிரியருக்கு வடமாகாண கல்வி திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு வலயத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இடை நிறுத்தும் இடைக்கால தடைக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இடமாற்றத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துவரும் இலங்கை ஆசிரிய சங்க பிரமுகர் ஒருவரது மனைவி மற்றும் சகோதரிற்கும் வன்னி மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முடக்கி அண்மையில் இலங்கை ஆசிரிய சங்கம் முன்னெடுத்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.இதனிடையே இலங்கை தமிழர் ஆசிரிய சங்கப்பிரதிநிதிகளை வடக்கு ஆளுநர் இன்று சந்தித்து பேச்சுக்களை நடாத்தியுள்ளார்.
ஆசிரிய இடமாற்றம் : குடும்ப விவகாரமா?
11
previous post