வல்வெட்டித்துறையில் இந்திய படைகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகளிற்கு நிவாரணம் பெற்றுக்கொள்ள ஒருசில தரப்புக்கள் முனைப்புகாட்டிவருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை அரங்கேறிய பகுதியிலேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததுநினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட சாரதியான சண்முகலிங்கம் அவர்களின் நினைவாக நோயாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் நினைவேந்தல்:மறுபக்கம் நட்டஈடு!
9
previous post