Homeசெய்திகள்

மருதனார்மடம் சந்தையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை துப்பாக்கியுடன் தேடி வந்தவர் பச்சை மிளகாயை வாங்கி சென்றார்

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு: மார்ச் 16 தீர்ப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆட்களை விநியோகித்த ஆவா குழு! 90 நாட்கள் விளக்கமறியலில் இருவர்!
சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு
தென் கொரிய இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது.
1,750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்


யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு  , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.